கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் 81 கோடியை எட்டிய மந்திர உச்சாடனம்
கரூர்: கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், 10 நாட்களாக நடக்கும் பஞ்சாட்சர மந்திர உச்சாடன பெருவேள்வி, இன்று நிறைவடைகிறது. ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை, 100 கோடி முறை உச்சரிக்க வேண்டும் என, தேவ பிரசன்னம் மூலம் முடிவு செய்யப்பட்டு, கடந்த, 1ல், பெருவேள்வி துவங்கியது. இதில், கடந்த ஒன்பது நாட்களாக, சிவனடியார்கள், சிவபக்தர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவியர் பங்கேற்று, காலை, 6:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, ஓம் நமசிவாய மந்திரத்தை உச்சரித்தனர். ஒவ்வொரு முறை மந்திரத்தை சொல்லும் போதும், அதை பதிவு செய்து கணக்கிட்டுக் கொள்ள வசதியாக, வேள்வியில் கலந்து கொள்பவர்களுக்கு, கவுன்டிங் மிஷின் வழங்கப்பட்டது.இந்நிலையில், இன்று காலை, 9:00 மணி வரை, 81 கோடியே, 24 லட்சத்து, 1,023 முறை, மந்திரம் உச்சரிக்கப்பட்டுள்ளது. நாளை பெருவேள்வி நிறைவு பெறுவதால் திட்டமிட்டப்படி, 100 கோடி முறை, மந்திரம் உச்சரிக்கப்படும் என, வேள்வி ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.