உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலுார் கைலாயநாதர் கோவில் திருப்பணிக்கு உதவ அழைப்பு

வேலுார் கைலாயநாதர் கோவில் திருப்பணிக்கு உதவ அழைப்பு

வேலுார்: வேலுார் அருகே, 1,000 ஆண்டு பழமையான, சிவன் கோவிலில், இரண்டு கோடி ரூபாய் செலவில், திருப்பணிகள் நடக்கின்றன.  வேலுார் மாவட்டம், ஒடுக்கத்துார் அருகே, பாக்கம் கிராமத்தில், உத்தர காவிரி ஆற்றங்கரையில், 1,000 ஆண்டு பழமையான, சிவன் கோவில், வெள்ளத்தால், சிதிலமடைந்தது.   இதனால், 400 ஆண்டுகளுக்கு மேல், அந்த இடத்துக்கு செல்வதை, பக்தர்கள் நிறுத்தி விட்டனர். இந்நிலையில், பக்தர் ஒருவர் கனவில் வந்த சிவன், தனக்கு மீண்டும் கோவில் கட்டும்படி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர், பொதுமக்களோடு, சிதிலமடைந்த கோவிலுக்கு சென்றார். அங்கு, ஐந்தரை அடி உயரத்தில், சிவன் லிங்கமாக இருந்தார். அங்கு, அம்பாள், முருகர், தட்சிணாமூர்த்தி, நந்தி போன்ற சிலைகள் பாழடைந்து காணப்பட்டன. பின், கோவிலை சுற்றி இருந்த, முட்புதர்கள் சுத்தம் செய்து, 15 ஆண்டுகளாக, வழிபாடு நடந்தன. இதையடுத்து, மக்கள் ஒன்றிணைந்து, பழைய கோவில் இருந்த இடத்தில், புதிய கோவில் கட்ட முடிவு செய்து, திருப்பணி கமிட்டி அமைத்து பணிகள் நடக்கின்றன.தற்போது, கோவில் கோபுரம் வரை பணிகள் முடிந்துள்ளன. அர்த்த மண்டபம், மகா மண்டபம் மற்றும் அம்பாள், விநாயகர், முருகர், தட்சிணாமூர்த்தி, நவக்கிரகம் சண்டிகேஸ்வரர் சிலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. கோவிலுக்கு, உமா மகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் திருக்கோவில் என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த, 4ல் அம்பாள் சன்னதி கட்ட பூமி பூஜைகள் நடக்கின்றன. உதவி செய்ய விரும்பும் பக்தர்கள், கோவில் திருப்பணி கமிட்டி தலைவர் குபேந்திரன், மொபைல்போன் எண் 93458 83326; பொருளாளர் ராமமூர்த்தி 90253 45747 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !