திருமலை பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேகம்
ADDED :2691 days ago
திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம், குன்னத்துார் மலையின் மீது உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருமலை பெருமாள் கோயில் உள்ளது. இக்கோவிலின், மகா கும்பாபிஷேகம், கடந்த மாதம், 27ம் தேதி நடந்தது. அதனைத் தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் விழா நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று நடந்த மண்டலாபிஷேகத்தையொட்டி, ஒரு யாகசாலை அமைத்து சிறப்பு ஹோமம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.