விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் ருத்ர மகா யாகம்: பக்தர்கள் பரவசம்
திருப்பூர்:திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், ருத்ர மகா யாகம் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இயற்கை சீற்றங்களிலிருந்து காப்பாற்றி, நாடு சுபிட்ஷமடைய, ஸ்ரீ ருத்ர மந்திரம், சாந்தி மந்திரம், ருத்ர மகா யாகம், அர்த்த சாம பூஜை சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், நேற்று நடந்தது. இதில், விநாயகர் பூஜை, கலசபூஜை, ருத்ர ஜபம், ருத்ர ேஹாமம், விஸ்வேஸ்வரசுவாமிக்கு, ருத்ர திரிசதையில் பஞ்ச முக அர்ச்சனை, மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிேஷகம், திருவீதி உலா நடந்தது.தொடர்ந்து, மூலவர் மற்றும் விசாலாட்சியம்மன், சுப்ரமணியருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. இந்நிகழ்வில், சிவனடியார்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.