பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2688 days ago
கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளியில், பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி கோவில், கும்பாபிஷேக விழாவையொட்டி, 1,108 பால் குட ஊர்வலம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி கோவில் புனரமைக்கப்பட்டு, மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. நேற்று காலை, 1, 108 பால் குடங்களை சுமந்து பெண்கள் ஊர்வலமாக நகரைச் சுற்றி கோவிலுக்கு வந்தனர். பின்னர் கலச ஆராதனை, பரிகார ஹோமம், பிரயாசித்த ஹோமம், நாடிசந்தனம் ஹோமங்கள் நடத்தப்பட்டு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை கோவில் நிர்வாகம் சார்பில், 108 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடக்கிறது.