சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை ஆனித்திருமஞ்சன தரிசனம்
ADDED :2756 days ago
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சனம் மகோற்சவத்தையொட்டி நாளை நடராஜர் ஆனந்த நடனமாடும் மகா தரிசனம் உற்சவம் நடக்கிறது. ஆனித் திருமஞ்சனம் உற்சவம் கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 16ம் தேதி தெருவடைச்சான் சப்பரத் தேரோட்டம் நடந்தது. இன்று தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து 21ம் தேதி அதிகாலை ராஜசபையில் நடராஜருக்கு ஆனித்திருமஞ்சன அபிஷேகம் நடக்கிறது. மதியம் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து ஆனந்த நடனமாடும் மகா தரிசனம், சித்சபை பிரவேசம் நடக்கிறது.
அன்னதானத்திற்கு முன் அனுமதி: ஆனித்திருமஞ்சனம் மற்றும் தேர்திருவிழாவை யொட்டி அன்னதானம் செய்ய விரும்புவோர் கோவில் நிர்வாகம், காவல்துறையிடம் அனுமதி பெற்று, சுகாதார வழிமுறைகள் பின்பற்றி உணவு தயார் செய்து வழங்குமாறு கலெக்டர் தண்டபாணி கேட்டுக் கொண்டுள்ளார்.