சித்தர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :5010 days ago
சேலம்: தை அமாவாசை தினத்தன்று, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவதுண்டு. சேலம் அருகேயுள்ள சித்தர்கோவிலில் சித்தேஸ்வரருக்கு நேற்று பூஜைகள் செய்யப்பட்டன. தை அமாவாசையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். சித்தர்கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்ததால், நேற்று சிறப்பு பஸ்கள் சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்பட்டன. சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நூற்றுக்கணக்கானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அதே போல அணைமேடு திருமணிமுத்தாறு ஆற்றங்கரையில், சிலர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.