உலகின் மாமருந்து!
ADDED :2691 days ago
“பயங்கர ரூபம் கொண்ட ருத்திரனுக்கு கொண்ட பரமமங்களமான ஒரு ஸ்வரூபம் உண்டு. அதற்கு ‘சிவா’ என்று பெயர். அந்தச் சிவாதான் உலக தாபத்துக்கெல்லாம் ஔஷதமாக இருக்கிறது. ருத்திரனுக்கும் ஔஷதம் அந்தச் சிவாவே.” ருத்ரன் ஆலஹாலத்தை உண்டு பிழைத்திருப்பதற்குக் காரணம். இந்தச் சிவா என்கிற அம்பாளான ‘மிருத ஸஞ்சீவினி’தான்.
“அம்மா, உன் தாடங்க மகிமையால் அல்லவா பரமேசுவரன் விஷத்தை உண்டும்கூட அழியாமல் இருக்கிறார்?” என்று ஆசார்யாள் (ஸ்ரீஆதிசங்கரர்) ‘ஸௌந்தர்ய லஹரி’யில் கேட்கிறார். அப்படிப்பட்ட சிவாவோடு சேர்த்து, ஸாம்பப் பரமேசுவரனைத் (ஸ+அம்ப =ஸாம்ப; அம்பாளோடு கூடியவராக) தியானிக்கவேண்டும். ஸாம்பமூர்த்தி, ஸாம்பசிவன் என்று அம்பாளோடு சேர்த்தே ஈசுவரனைச் சொல்வது வழக்கம்.