ராமநாதபுரம் கோதண்டராமர் கோயில் பிரமோற்ஸவம் துவக்கம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கோதண்ட ராமர் கோயில் ஆனி பிரமோற்ஸவ விழா காப்புகட்டு தலுடன் துவங்கியது.
ராமநாதபுரம் கோதண்டராமர் கோயிலில் ஆனி பிரமோற்ஸவ விழா நேற்று (ஜூலை 13)ல் காலை 1000 மணிக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. திருவிழா நாட்களில் காலை பல்லக் கிலும், இரவு சுவாமி தோளுக்கினியான் வாகனம், சிம்மம்,ஆஞ்சநேய,சேஷ வாகனம், கருட வாகனங்களில் தினமும் வீதிவலம் வருவார்.
ஜூலை 18 ல் இரவு 7:00 முதல் 8:00 மணிக்குள் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. அடுத்த நாள் மஞ்சள் நீர் இரவு இந்திர விமானம், புஷ்ப பல்லக்கு, ஜூலை 20 ல் இரவு குதிரை
வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. ஜூலை21 ல் காலை 9 மணிக்கு ரதோற்ஸவம் நடக்கிறது. ஜூலை 22 ல் காலை 10:00 மணிக்குள் தீர்த்தோற்ஸவம், இரவு தோளுக் கிணியான் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வருகிறார். அதனுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை திவான் மகேந்திரன், விசாரணைதாரர் கண்ணன், அலுவலர் ராமு ஆகியோர் செய்து வருகின்றனர்.