உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவில் தரிசன முடிவுரை

திருக்கோவில் தரிசன முடிவுரை

மதுரை அமுதின் காவிய நாயகி ஸ்ரீ மீனாக்ஷி நாயகர் ஸ்ரீ சோமசுந்தரர் திருக்கோவில் பற்றிய இத்தொகுப்புகள் முழுவதையும் சேர்த்துப் பார்த்திடில் இது இந்நூலின் ஒரு முழுவுரையே அன்றி முற்றுப்பெற்றதாகாது.

கலை நுட்ப, ஆகம, சிற்ப, அரும் கோயிற்கலைகள் யாவும், என்றென்றும் காண்பவர் கற்றுணரத்தக்க வகையில் அமைந்த ஒரு கலைக்கூடமாயும், காணும்போதெல்லாம் புதிது புதிதாய்த் தோற்ற உணர்வு தரும் கல்விக்கூடமாயும் மெய்யன்பர்களின் அன்பு நெஞ்சகத்தினின்றும் என்றென்றும் அருள் வற்றாது பொழிந்த வண்ணமே இருக்கும்.

இறைத்திருவருளின் வான் கங்கையாகவும், பார்த்த மாத்திரத்திலயே பக்தர்களை பரவசப்படுத்தும் பாற்கடல் பரப்பாகவும் இவ்விதமே காலச்சுவடுகளில் காலங்காலமாய்க் காணும் பெருமைகளை கற்பனைக் கெட்டா கணிதமும் கூறா அதிசயத் தொகுப்புகளில் எங்ஙனம் முழுவதும் கூறிவிட முடியும். எனவே தான் இம்மதுரை அமுது பற்றி யாது கூறிடப் புகினும் அது நிறைவு பெற்ற தாகாது. என்பதில் எந்த ஐயமும் இல்லை.

சாலோகம் என இறைவனின் இருப்பிடத்திருப்பதும், சாமிபம் என இறையுருவை எப்போதும் பார்த்திருப்பதும், சாரூபம் என இறையாம்சமே பெற்றுருவாதலும் சாயுச்சியம் என பரமுக்தி பிறவியற்ற நிலையில் எய்துதலும், இவ்வாறாய் நான்கு பேற்றினையும் ஒருசேரப் பெற்றிட மதுரை திருக்கோவில் தரிசனம் செய்திடில் கை கூடிவிடும் என்பது சுகானுபவத்தோர் கூறும் உண்மையே.
 
""நன்றே வருகினும் தீதே விலகினும் நான் அறிவது
ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம் எனக்கு உள்ளவெலாம்
அன்றே உனது எனும் அளித்துவிட்டேன் அறியாத குணங்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே
அபிராமி அந்தாதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !