சிங்கம்புணரி சிவபுரிபட்டியில் சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயில் பிரதோஷ விழா
ADDED :2597 days ago
சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் ஆவணி பிரதோஷ விழா நடந்தது. மாலை 4:30 மணிக்கு கோயில் முன்புறமுள்ள 5 அடி உயர நந்தீஸ் வரருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களைக்கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பக்தர்கள் சிவதுதி பாட நந்திதேவருக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்த ப்பட்டது. மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. சுவாமி பிரியாவிடையுடன் வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.