ராமேஸ்வரத்தில் சமுத்திர ஆரத்தி
ADDED :2567 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் சமுத்திர ஆரத்தி வழிபாட்டு குழு சார்பில் உலக நன்மைக்காகவும், தமிழகத்தில் மழை வேண்டி நேற்று 24ல் இரவு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் சமுத்திர ஆரத்தி நடத்தினர்.
பெண்கள் மகா தீபம் ஏற்றி, சமுத்திர ஆரத்தி நடத்தினர். பின் அக்னி தீர்த்த கடலில் மலர் தூவி பூஜை நடத்தி வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப் பட்டது. இதில் பா.ஜ.,மாவட்ட தலைவர் முரளீதரன், கம்பன் கழக பொருளாளர் ராமு, சுடலை உட்பட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை சமுத்திர ஆரத்தி குழு நிர்வாகிகள் நாகராஜ், கணேசன், பாஸ்கரன் செய்திருந்தனர்.