உத்தரகோசமங்கை வாராகி அம்மன் கோயிலில் முளைப்பாரி விழா
ADDED :2640 days ago
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை வடக்குத்தெருவில் உள்ள வாராகி அம்மன் கோயிலில் முளைப்பாரி விழா நடந்தது. மழை பெய்து ஊர் செழிக்கவும், உலக நன்மைக்காகவும் அம்மனுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்தனர். நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்து,வாரகி அம்மன் கோயில் முன்புறம் சீதைப்புனல் ஊரணியில் முளைப்பாரி கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை வடக்குத்தெரு விழாக்கமிட்டியினர் செய்தனர்.