உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதுகுளத்தூர் அருகே சிறுமணியேந்தல் முத்துமாரி அம்மன் கோயிலில் பொங்கல் விழா

முதுகுளத்தூர் அருகே சிறுமணியேந்தல் முத்துமாரி அம்மன் கோயிலில் பொங்கல் விழா

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே சிறுமணியேந்தல் முத்துமாரி அம்மன் கோயிலில் பொங்கல் விழா நடந்தது. பக்தர்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன.

இரவில் நாடகம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்தனர். வாத்தியனேந்தலில் சோணை கருப்பணசாமி கோயிலிலும் பொங்கல் விழா நடந்தது. திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !