உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் பெரியகோவிலில் ரூ.10 லட்சம் மதிப்பிலான புதிய பைபர் ரதம் உபயம்

தஞ்சாவூர் பெரியகோவிலில் ரூ.10 லட்சம் மதிப்பிலான புதிய பைபர் ரதம் உபயம்

தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில் சதயவிழாவின் போது நடைபெறும் திருமுறை திருவீதியுலாவிற்காக, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பைபரலான பெரியகோவில் வடிவிலான ரதத்தை உபயதாரர் வழங்கினார்.

தஞ்சாவூர் பெரியகோவிலில் ராஜராஜசோழன் பிறந்த தினத்தை சதய விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது திருமுறை திருவீதியுலா வெகு விமர்சையாக நடைபெறும். அப்போது பெரியகோவில் போன்ற மாதிரி ரதம் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும். இந்நிலையில் தற்போது உள்ள ரதம் சேதமடைந்த நிலையில், வரும் 20ம் தேதி நடைபெறும் சதயவிழாவிற்காக புதிய ரதத்தை தஞ்சாவூர் அடுத்த வல்லத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பைப்பரால் பெரியகோவில் போன்ற தோற்றத்தில் செய்த ரதத்தை உபயமாக வழங்கினார். இவர் சென்னையில் சினிமாவில் செட் வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த ரதத்தை 40 நாள்களில் செய்து முடித்துள்ளார். இந்த ரத்தின் நீளம் 18 அடி, உயரம் 12 அடி, அகலம் 7 அடி எனவும் இது பெரியகோவிலின் முழு அளவில் ஒரு பங்கு என ராமலிங்கம் தெரிவித்தர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !