செங்கல்பட்டில் தசரா விழா துவக்கம்
ADDED :2611 days ago
செங்கல்பட்டு, செங்கல்பட்டில், தசரா விழா, நேற்று துவங்கி, பத்து நாட்கள் நடைபெறுகிறது. செங்கல்பட்டில், நவராத்திரியை யொட்டி, பத்து நாள் தசரா விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, 130ம் ஆண்டு, தசரா விழா, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு துவங்கியது. வியாபாரிகள் சார்பில், சின்னக்கடை, பூக்கடை, ஜவுளிக்கடை, சின்னநத்தம், புதுஏரி, அண்ணாநகர், ஓசூரம்மன், மதுரைவீரன், அங்காளம்மன் உள்ளிட்ட இடங்களில், அம்மன் அலங்காரத்துடன் காட்சிக்கு வைக்கப்படுவார்.ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதுபோல, அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.