உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செய்யாறு கோவில் சிலைகளை எடுக்க வந்த அதிகாரிகளை மக்கள் முற்றுகை

செய்யாறு கோவில் சிலைகளை எடுக்க வந்த அதிகாரிகளை மக்கள் முற்றுகை

செய்யாறு: பழமை வாய்ந்த சிவன் கோவிலில், ஐம்பொன் சிலைகளை எடுத்து செல்ல முயன்ற, அறநிலையத்துறை அதிகாரிகளை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த,செங்கத்தான் குண்டில், பழமை வாய்ந்த திருநீரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, 17 அடி ஆழமுள்ள பாதாள அறையில், ஐம்பொன்னா லான, 13 சிலைகள், ஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை, பாதுகாப்பான இடத்தில் வைக்க, அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். நேற்று (அக்., 14ல்), அறநிலையத் துறை ஆய்வாளர்கள் மேகலா, நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள், 25க்கும் மேற்பட்ட போலீசாருடன் அங்கு சென்றனர்.

சிலைகளை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை,  பொதுமக்கள் முற்றுகை யிட்டனர். ஏற்கனவே, பத்துக்கும் மேற்பட்ட சிலைகள் திருட்டு போனதாக புகார் தெரிவித்த மக்கள், மீதமுள்ள சிலைகளை எடுத்து செல்ல விடமாட்டோம் என, எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, சிலைகள் மற்றும் ஆபரணங்களின், எடை, உயரம், ஆகியவற்றை கணக் கெடுத்த அதிகாரிகள், அவற்றை அங்கேயே வைத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !