உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் காளியம்மன் கோயிலில் நவராத்திரி விழா

பெரியகுளம் காளியம்மன் கோயிலில் நவராத்திரி விழா

பெரியகுளம்: பெரியகுளம் கம்பம்ரோடு காளியம்மன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, லட்சுமிபுரம் ரோஸி வித்யாலயம் பள்ளி சார்பில் இறைவழிபாடு, ஈகை, கல்வி, அறிவு, விவசாயம், உழைப்பு, பொருள் தேடல் உட்பட உலக நாடக சக்கரத்தின் சரித்திரத்தை உணர்த்தும் ஆன்மிககொலு கண்காட்சி நடந்து வருகிறது.காளியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்து வருகிறது. அம்மன், அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் காட்சியளித்தார். பக்தர்கள் பஜனை பாடி வருகின்றனர். ஏற்பாடுகளை கட்டளைதாரர்கள் நகராட்சி முன்னாள் தலைவர் ஓ.ராஜா, சசிகலாவதி, முத்துகுகன், ஐஸ்வர்யா, ரோஸிநிராஜா ஆகியோர் செய்து வருகின்றனர். குருதட்சிணாமூர்த்தி சேவா சங்கம் ஆலோசகர் சரவணன், பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !