ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பால்குட உற்சவம்
ADDED :5337 days ago
அரியலூர்: அரியலூர் ஸ்ரீகாமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பால்குட உற்சவம் மற்றும் பூச்சொறிதல் விழா நடந்தது. அரியலூர் அண்ணாநகரில் உள்ள ஸ்ரீகாமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த, 30ம் ஆண்டு ராகு கால வழிபாடு விழாவை முன்னிட்டு, காலை 10.30 மணிக்கு, அண்ணா நகர் மற்றும் கே.கே.நகர் பக்தர்கள் பங்கேற்று நடத்திய பால்குட ஊர்வலம் நடந்தது. மங்கல வாத்தியங்களுடன், கோயில் வளாகத்தில் நடந்த பால் குட ஊர்வலத்தை தொடர்ந்து, நேற்று மதியம் பூச்சொரிதல் விழா நடந்தது. பக்தி சிரத்தையுடன் நடந்த இவ்விழாவில், அரியலூர் அண்ணா நகர், கே.கே. நகர், மற்றும் எருத்துக்காரன்பட்டியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.