கோயில் சுவர்களில் வெள்ளை, காவி பட்டை இருப்பதன் நோக்கம் என்ன?
ADDED :5015 days ago
வெண்மை தூய்மையின் சின்னம். காவி தியாகத்தின் அடையாளம். கல்வி கற்பவன் தூய உள்ளத்தோடு ஒழுக்கமாக இருக்கவேண்டும் என்பதற்காக சரஸ்வதி வெண் தாமரையிலும், செம்மையான(நேர்மை) வழியில் பொருள் தேட வேண்டும் என்பதற்காக திருமகள் செந்தாமரையிலும் இருப்பதையும் பார்க்கலாம். பக்திக்கு தூய்மையும், நேர்மையும் அவசியம் என்பதே பட்டை அடிப்பதின் நோக்கம். இப்பண்புகளை நம்மிடம் வளரச் செய்யும் இடமாக கோயில்கள் திகழ்கின்றன.