கார்த்திகை தீப திருவிழா அகல் விளக்குகள் விற்பனை
விழுப்புரம்: கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு, அகல் விளக்குகள் விற்பனை துவங்கியது. தமிழகத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில், தீபத் திருவிழா விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, கார்த்திகை திருவிழாவின்போது வீடுகளில் மாலை நேரத்தில், அகல் விளக்கு ஏற்றி பெண்கள் வழிபடுவது வழக்கம். விழுப்புரம் அடுத்த சாலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், அகல் விளக்குகள் உற்பத்தி செய்து, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அகல் விளக்குகள் 60 பைசா துவங்கி, 10 ரூபாய் வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு வண்ணங்கள் பூசி, புதுப்புது டிசைன்களில் அகல் விளக்குகள் உற்பத்தி செய்து விற்பனைக்கு வந்துள்ளன. ஏராளமான பொதுமக்கள், அகல் விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். மக்களின் ரசனையை அறிந்து, புதுப்புது வடிவில் அகல் விளக்குகளை உற்பத்தி செய்து, விற்பனை செய்வதாக மண்பாண்ட உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.