உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் கோயிலில் 18ம் தேதி பிரமோற்சவம்

நத்தம் கோயிலில் 18ம் தேதி பிரமோற்சவம்

ஸ்ரீவைகுண்டம்:வரகுணமங்கை நத்தம் விஜயாசன பெருமாள் மாசி பிரமோற்சவம் வரும் 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரகுணமங்கை நத்தம் விஜயாசன பெருமாள் கோயில் பிரமோற்சவத்தை முன்னிட்டு வரும் 18ம் தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. தினமும் காலை தோளுக்கினியானில் வீதி புறப்பாடு, பகல் 11 மணிக்கு திருமஞ்சனம், தீர்த்த விநியோக கோஷ்டி நடக்கிறது. மாலையில் 7.30 மணிக்கு ஹம்ச வாகனம், சிம்ஹ வாகனம், ஹனுமந்த வாகனம், சேவு வாகனம் மற்றும் வரும் 22ம் தேதி மாலை கருடசேவை நடக்கிறது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் பக்தர்கள், பரகாலன் பைந்தமிழ் பாசறை உறுப்பினர்கள், ஸ்தலத்தார்கள் ஸ்ரீனிவாசன், ராஜப்பா, ஸ்ரீனிவாசன் ஆகியோர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !