ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பகல்பத்து உற்சவம் துவக்கம்
ADDED :2533 days ago
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவில் பகல்பத்து உற்சவம் துவங்கியது.
வைகுண்ட ஏகாதசியின் பகல்பத்து முதல் நாளான இன்று நம்பெருமாள் நீள்முடி கொண்டை, வைர அபயஹஸ்தம், காசுமாலை, முத்து மாலையுடன் ஆழ்வார்கள் புடைசூழ எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வரும் டிசம்பர் 18ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு பரமபதவாசல் திறப்பு நடைபெறவுள்ளது.