கிளி வடிவ அக்னி சிலை
ADDED :2594 days ago
திருவாரூர் மாவட்டம் கீரனூர் சிவலோகநாதர் கோயிலில், கிளி வடிவில் அக்னியின் சிலை உள்ளது. சாபம் காரணமாக கிளி வடிவம் அடைந்த அக்னிபகவான், சிவலோகநாதரை வணங்கியதால் விமோசனம் பெற்று, தனது சுயவடிவம் அடைந்தார். இவருக்கு வாகனம் ஆடு. அக்னி பகவானோ வீரியம் மிக்கவர். ஆனால், ஆடு மந்த குணமுடையது. குணத்தில் நெருப்பாக இருந்தாலும் உயிர்களுக்கு அளவான வெப்பத்தைக் கொடுப்பவர் என்பது இதன் தத்துவம். இந்தக் கோயிலை பத்தாம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் கட்டி உள்ளார்.