உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தினமலர் இணையத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நேரடி ஒளிபரப்பு

தினமலர் இணையத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நேரடி ஒளிபரப்பு

தினமலர் இணையதளம் முக்கிய நிகழ்வுகளை எப்போதுமே வாசகர்களுக்கு நேரடியாக ஒளிபரப்பி வருகிறது, நாளை  18/12/2018 காலை ஸ்ரீரங்கம்  ரங்கநாதப் பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு உள்பட முக்கிய பெருமாள் கோவில்களின் சொர்க்கவாசல் நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் நாளை 18/12/2018 செவ்வாய் கிழமை அதிகாலை 5 மணியில் இருந்து 5:30 மணிக்குள்ளாக வைகுண்டவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக வருவார்

இதே போல சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்,கோவை காரமடை ரங்கநாதர்,புதுச்சேரி சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர்,மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி மற்றும் மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் வைகுண்ட வாசல் திறப்பு விழா நிகழ்வுகளும் நடைபெற இருக்கிறது.

இதில் மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் மட்டும் சொர்க்கவாசல் திறப்பு  மாலை 6 மணிக்கும்,மற்ற கோவில்களில் அதிகாலை 5 மணியளவிலும்  நடைபெறும்.

மேற்கண்ட  கோவில்களில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.இதனை நீங்கள் www.dinamalar.com ல் தரிசித்து மகிழலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !