உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவாரம் முருகன் கோயிலில் மண்டல பூஜை

தேவாரம் முருகன் கோயிலில் மண்டல பூஜை

தேவாரம்: தேவாரம் முருகன் கோயில் 3ம் ஆண்டு மண்டல பூஜை நடந்தது. ஜமின்தார் சிவராஜபாண்டியன் தலைமை வகித்தார். பாதயாத்திரை பக்தர் குழு குருசாமி குமார், கணேசன் முன்னிலை வகித்தனர். பாலசுப்ரமணியர் கோயிலில் இருந்து உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் அரங்கநாதர் கோயில் எதிரே ஆசிரமத்தில் எழுந்தருளினார். சந்தை பிள்ளையார் கோயிலில் இருந்து 70 பால்குடம் சுமந்து பக்தர்கள் ஊர்வலம் வந்தனர். பாலபிஷேகம் , சிறப்பு பூஜையில்  ஏராளமானோர்  பங்கேற்றனர். சுவாமி அலங்கார ரதத்தில் வலம் வந்தார்.  அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !