சிதம்பரத்தில் சபரிமலை புனிதம் காக்க ஆலோசனை கூட்டம்
ADDED :2559 days ago
சிதம்பரம்: தமிழ்நாடு சபரிமலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் சபரிமலை புனிதம், பாரம்பரியம் மீட்போம் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது.ஆடிட்டர் வைத்தியநாதன் தலைமை தாங்கினார். நடராஜ விலாஸ் ஜூவல்லரி ஹால் உரிமையாளர் ராமநாதன் முன்னிலை வகித்தார்.
சபரிமலை பாதுகாப்பு இயக்க மாநில செயலர் குருசுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். குருசாமிகள் கண்ணபிரான், சிவக்குமார், கணேசன், சுப்ரமணியன், பாஸ்கர், திட்டுக்காட்டூர் நடராஜன், ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், சபரி மலையின் உலகம் போற்றும் பாரம்பரியத்தை காக்க பெண்கள் துணை நிற்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.