மதுரை எஸ்.எஸ்.காலனி சத்சங்கத்தில் ஆன்மிக விழா
ADDED :2509 days ago
மதுரை:மதுரை எஸ்.எஸ்.காலனி சத்சங்கத்தில் அனுஷத்தின் அனுகிரஹம் சார்பில் மகா பெரியவர் 25வது ஆராதனை விழா நடந்தது. பஜகோவிந்தமும், மகா பெரியவரும் எனும் தலைப்பில் ஆதித்யா கல்யாணராமன் பேசியதாவது: மனிதனுக்கும், மிருகத்துக்கும் என்ன வேறுபாடு உள்ளது. மனிதன் போலவே மிருகங்களும் உண்கிறது, நடக்கிறது, மற்ற மிருகங்களிடம் தங்களின் மொழிகளில் பேசுகிறது, இனப்பெருக்கம் செய்கிறது.
ஆனால் மனிதனுக்கு மட்டுமே அறிவும், சிந்திக்கும் திறனும் உள்ளது. அறிவின் வழியில் இறைவனை பார்ப்பதே மனிதனின் கடமை. சதா இறைவனை பூஜிப்பதே மனிதனின் கடமை,
என்றார்.