உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை இறைவனை நம்புபவரே ஞானி இந்திரா சவுந்தர்ராஜன் பேச்சு

மதுரை இறைவனை நம்புபவரே ஞானி இந்திரா சவுந்தர்ராஜன் பேச்சு

மதுரை:வாழ்வில் இறைவனால் நடக்கும் என எழுதப்பட்டவையே நடக்கிறது. அதை ஒத்துக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவரே ஞானி, என எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் கூறினார்.

மதுரை காஞ்சி காமகோடி பீடத்தில் ஆங்கில புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடந்தன. ஸ்ரீமடத்தின் தலைவர் ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மணி மணியாய் மாணிக்கவாசகர் எனும்
தலைப்பில் எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் மேலும் பேசியதாவது: வாழ்வில் இன்பமென்பது சிறிது காலம் தான். அதனை அனுபவிப்பத்தில் தவறில்லை.

உலகினை நமக்கு காட்டும் ஜன்னலாக விளங்குவது கண் விழி தான். கண்ணை மூடிடும் போது நம் முன் உள்ள உலகம் காணாமல் போய் விடுகிறது. மரத்திலிருந்து பூ பூத்து காய்
காய்த்து, பழுத்து விடுபடுவது போல் வாழ்வை படிப்படியாக விடுவித்து ஞானத்தினை அடைய வேண்டும். மாணிக்கவாசகர் கனிவான கருணை உள்ளவர், என்றார்.மடத்தின் பொருளாளர்
ஸ்ரீகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !