உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாரியூர் வகையறா கோவில்களின் உண்டியல்கள் திறப்பு: ரூ.15.93 லட்சம் காணிக்கை

பாரியூர் வகையறா கோவில்களின் உண்டியல்கள் திறப்பு: ரூ.15.93 லட்சம் காணிக்கை

கோபிசெட்டிபாளையம்: பாரியூர் வகையறா கோவில்களின் உண்டியல்கள், நேற்று (ஜன., 2ல்) திறக்கப்பட்டதில், மொத்தம், 15.93 லட்சம் ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, பாரியூர் கொண்டத்துகாளியம்மன்
வகையறா கோவில்களின், 10 உண்டியல்கள், நேற்று (ஜன., 2ல்) திறக்கப்பட்டன.

இந்து சமய அறநிலையத்துறை, துணை கமிஷனர் பழனிக்குமார், செயல் அலுவலர் நாகராஜ், ஆய்வாளர் கமலா ஆகியோர் முன்னிலையில், நேற்று (ஜன., 2ல்) பகல் 12:30 மணிக்கு, உண்டியல்கள் திறக்கப்பட்டன.

இதிலுள்ள காணிக்கைகளை, தனியார், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பினர், கணக்கீடு செய்தனர். இதில், மொத்தம், 15.93 லட்சம் ரூபாய், தங்கம், 76, கிராம், வெள்ளி, 140, கிராம், ஆகியவற்றை காணிக்கையாக, பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !