உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பள்ளிபாளையம் அறிவுத்திருக்கோவிலில் அமைதி தின வேள்வி

பள்ளிபாளையம் அறிவுத்திருக்கோவிலில் அமைதி தின வேள்வி

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அறிவுத் திருக்கோவிலில், உலக அமைதி தின வேள்வி கொண்டாடப்பட்டது. பள்ளிபாளையம் மகரிஷி நகரில் உள்ள அறிவுத்திருக்கோவிலில், நேற்று முன்தினம் (ஜன.,1ல்), புத்தாண்டை முன்னிட்டு, உலக அமைதி தின வேள்வி நடந்தது. காலை, 9:00 முதல், மாலை, 6:00 மணி வரை, தொடர்ந்து, வாழ்க வளமுடன் என, வாழ்த்திக் கொண்டனர்.

தொடர்ந்து, கருத்தரங்கம் நடந்தது. உள்ளும், புறமும் என்ற தலைப்பில், பேராசிரியர் பானுமதி; இயற்கையும், இறைவனும் என்ற தலைப்பில், முதுநிலை பேராசிரியர் பரமசிவம் ஆகியோர் பேசினர். அறக்கட்டளை தலைவர் சீனிவாசன், டாக்டர் பாரதி இளமுருகன் மற்றும் பேராசிரி யர்கள், மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !