சென்னிமலை கோவிலில் 108 சங்கு சிறப்பு பூஜை
ADDED :2457 days ago
சென்னிமலை: சென்னிமலையில், மலை மீதுள்ள முருகன் கோவிலில், ஒவ்வொரு வருடமும், மார்கழி மாதத்தில், விழாக்குழு சார்பில், சிறப்பு வழிபாடு நடக்கிறது.
இந்த ஆண்டு பூஜைகள், டிசம்பர், 16 முதல், தொடங்கி, தினமும், நடந்து வந்தது. மார்கழி மாத நிறைவு, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி, அதிகாலை 5:00 மணிக்கு, கோமாதா பூஜையை தொடர்ந்து, மதி குருக்கள் தலைமையில், 13 சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத, விநாயகர் வழிபாடு, 108 சங்கு பூஜை யாக வேள்வி நடத்தப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.