உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் பட்டாபிஷேக தின விழா!

புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் பட்டாபிஷேக தின விழா!

புவனகிரி :புவனகிரி ராகவேந்திரர் கோவில் பட்டாபிஷேக தின விழாவையொட்டி வேத விற்பன்னர்களால் அஷ்டாஷரா மகா மந்திர யாகம் செய்யப்பட்டது. ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் பிறந்த இடமான புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் கடந்த 19ம் தேதி முதல் வரும் 29ம் தேதி வரை அர்ச்சனை நடக்கிறது. மந்த்ராலயா சுஷ்மீந்திர தீர்த்த சுவாமிகள் துவக்கி வைத்தார். நேற்று ராகவேந்திரரின் 390வது பட்டாபிஷேக தின விழா பெங்களூர் சீனுவாச்சாரியார், சத்யநாத ஆச்சார், ஸ்ரீதர் ஆச்சார் ஆகியோர் முன்னிலையில் வேதவிற்பன்னர்கள் ராகவேந்திரர் கோயில் அருகில் பந்தலமைத்து அஷ்டாகஷரா மகா மந்திர யாகம் மேற்கொண்டனர். மேலும் ராகவேந்திரா கோவில் மிருத்திகா பிருந்தாவனத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகமும் மகா தீபாரதனையும் நடந்தது. அண்ணாமலைப் பங்கலைக்கழக பேராசிரியர் உதயசூரியன் தலைமையில் மேலாண்துறை மாணவ, மாணவிகள் 50 பேர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். கடலூர்: கூத்தப்பாக்கம் ஸ்ரீராகவேந்திரர் கோவிலில் நேற்று காலை 100 லிட்டர் பால் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 25 ஆயிரம் ரூ மதிப்பில் செய்யப்பட்ட புதிய கவசம் பிருந்தாவனத்தில் சாத்தப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மத்வசித்தார்த சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !