உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் கோயில் மாசித்திருவிழா துவக்கம்!

திருச்செந்தூர் கோயில் மாசித்திருவிழா துவக்கம்!

திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித்திருவிழா நாளை அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று மாலை 4 மணிக்கு வடக்கு ரதவீதியில் உள்ள 12ம் திருநாள் மண்டகபடியில் இருந்து கொடிபட்டம் வீதிஉலா நடக்கிறது. நாளை அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், மற்ற காலம் தொடர்ந்து நடக்கிறது. காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. மார்ச் 1ம் தேதி ஐந்தாம் திருவிழா அன்று இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. 3ம் தேதி சனிக்கிழமை 7ம் திருநாள் அன்று மாலை 4 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் தங்கசப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதிஉலா நடக்கிறது. 4ம் தேதி 8ம் திருநாள் அன்று காலை 5 மணிக்கு வெள்ளைசாத்தி புறப்பாடும், பகல் 11.30 மணிக்கு மேல் பச்சை கடசல் சப்பரத்தில் சுவாமி பச்சைசாத்தி கோலத்தில் வீதி உலாவும் நடக்கிறது. 3ம் தேதி காலை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. 7ம் தேதி 11ம் திருநாள் அன்று இரவு தெப்பதிருவிழா நடைபெறுகிறது. விழாவில் தினசரி கோயில் கலையரங்கில் பக்தி சொற்பொழிவு மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன், உதவி ஆணையர் செல்லத்துரை, அலுவலக கண்காணிப்பாளர் செல்வக்குமாரி உட்பட ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !