உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மைய மண்டபத்தை புதுப்பிக்க மீண்டும் நிரம்பும் தெப்பக்குளம்!

மைய மண்டபத்தை புதுப்பிக்க மீண்டும் நிரம்பும் தெப்பக்குளம்!

மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட மாரியம்மன் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தை புதுப்பிக்க, மீண்டும் அதில் தண்ணீர் விடப்படுகிறது.ஆண்டுதோறும் இக்குளத்தில் நடக்கும் தெப்பத்திருவிழாவிற்காக செயற்கை முறையில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. பின், தண்ணீர் நிரப்பப்படுவதில்லை. இதனால் சில வாரங்களிலேயே தண்ணீர் குறைந்து, வறண்டு, கோடை விடுமுறைக்கான கிரிக்கெட் மைதானமாக மாறிவிடும். இந்நிலையில், பிப்.,7ல் நடந்த தெப்பத்திருவிழாவிற்காக இக்குளம் நிரப்பப்பட்ட நிலையில், மீண்டும் தண்ணீர் விடப்படுகிறது. கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் கூறியதாவது :மைய மண்டபத்தை ரூ.45 லட்சம் செலவில் புதுப்பிக்கும் பணி விரைவில் துவங்குகிறது. தண்ணீர் வற்றும் வரை காத்திருந்தால் பணிகளை திட்டமிட்டப்படி முடிக்க முடியாது. எனவே தற்போதைக்கு படகில் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக தண்ணீர் விடப்படுகிறது. மைய மண்டப கோபுரங்களுக்கு, பல வண்ணங்கள் அடிக்கப்படுகின்றன, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !