உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புனிதமான வெள்ளிக்கிழமை

புனிதமான வெள்ளிக்கிழமை

முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை புனித நாள். அன்று ஐந்து வேளை தொழுகை நடத்துவார்கள். அந்நாளில், மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை வகுத்துள்ளார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.
* வெள்ளிக்கிழமையன்று நன்றாகக் குளித்து உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். முழுத் துõய்மையுடன் இருக்கும் பழக்கத்தை பேணி
வாருங்கள்.
* எவரேனும் வெள்ளிக்கிழமையன்று பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வந்தால், அவர் குளித்து விட்டு வரட்டும். வாரத்தில் ஒரு முறையாவது
ஒரு முஸ்லிம் தன் தலையையும், உடலையும் கழுவி குளித்துக் கொள்வது இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமையாகும்.
*பருவமடைந்த ஒவ்வொருவரும் வெள்ளிக்கிழமை குளித்து விட வேண்டும். இயன்றால் நறுமணம் பூசிக்கொள்ளவும் வேண்டும்,” என்கிறார் அவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !