நீங்கள் யார் பக்கம்?
ADDED :2456 days ago
ஆபிரகாம் லிங்கன் பிரச்னை ஒன்றைத் தீர்க்க வழி தெரியாமல் குழம்பினார். அவரைச் சந்திக்க வந்த நண்பரிடம் பிரச்னையை தெரிவித்தார். அவராலும் தீர்வு சொல்ல முடியவில்லை. இருந்தாலும் அவர், “நண்பரே கலங்க வேண்டாம். கடவுள் உங்கள் பக்கம் இருக்கிறார்” என்றார். “கடவுள் என் பக்கம் இருக்க வேண்டும் என்பதல்ல; நான் அவர் பக்கம் இருக்க வேண்டும். அதுவே என் விருப்பம்” என்றார். குழப்பத்திலும் அவரது தெளிவான பதிலைப் பார்த்தீர்களா! இதை படித்ததும் “எனக்கு தேவனை அண்டிக் கொண்டிருப்பதே நலம்” என்ற வசனம் நினைவிற்கு வரும். கடவுள் நம் பக்கம் வர வேண்டும் என்பதை விட நாம் அவரின் பக்கம் இருக்க முயற்சிப்போம்.