உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கோனியம்மன் கோவிலில் கொடியேற்றம்

கோவை கோனியம்மன் கோவிலில் கொடியேற்றம்

கோவை: கோனியம்மன் கோவில் கொடியேற்றம் மற்றும் அக்னிச்சாட்டு நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மன் அருள் பெற்றனர்.

கோனியம்மன் கோவில் திருத்தேர் திருவிழா கடந்த, 11ம் தேதி, தேர் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. பூச்சாட்டு நிகழ்ச்சியை அடுத்து, நேற்று இரவு இடம்பெற்ற கொடியேற்றம் மற்றும் அக்னிச்சாட்டு நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அடுத்த மாதம், 11ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !