உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி - பங்குனி விழாவின் முன்னோட்டமாக நடக்கும் பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. லலிதா முத்துமாரியம்மன் சேவைக்குழு சார்பில் பூத்தட்டு ஊர்வலம் முத்தாலம்மன் கோயிலிலிருந்து கொண்டு செல்லப்பட்டது.விஸ்வகர்மா தச்சுபட்டறை தொழிலாளர் சங்கம் சார்பில் கணபதி கூடத்திலிருந்தும், அண்ணா தினசரி மார்க்கெட் தொழிலாளர் சங்கம் சார்பில் அப்பகுதியிலிருந்தும், செஞ்சை பகுதி மக்கள் சார்பில் தர்மமுனீஸ்வரர் கோயிலிலிருந்தும், மெ.மெ.வீதி வர்த்தகர்கள் சங்கம் சார்பில் அங்கிருந்தும், ரயில்வே ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில் ரயில்வே பகுதியிலிருந்தும், அண்ணாநகர் பகுதி மக்கள் சார்பில் அப்பகுதியிலிருந்தும் பூத்தட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அம்பாளுக்கு சார்த்தப்பட்டது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமசாமி தலைமையில் செயல் அலுவலர் அகிலாண்டேஸ்வர், கணக்கர் அழகுபாண்டி மற்றும் மீனாட்சிபுரம் இளைஞர் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !