திண்டிவனம் அருகே ஸ்ரீராம் பள்ளியில் ஹயக்கிரீவர் ஹோமம்
ADDED :2492 days ago
திண்டிவனம்:திண்டிவனம் அருகே ஸ்ரீராம் பள்ளியில்ஹயக்கிரீவர் ஹோமம் நடந்தது. திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் உள்ள ஓமந்தூர் ஸ்ரீராம் பள்ளியில், ஸ்ரீ அகோபில மடத்தின் 46ம் பட்ட மடாதிபதி ஸ்ரீரங்கநாத யதீந்திர மகாதேசிக சுவாமிகள் தலைமையில் நேற்று
(மார்ச்., 1ல்) காலை 8.00 மணியளவில் ஹயக்கிரீவர் ஹோமம் நடந்தது.
பின்னர் மகாதேசிக சுவாமிகள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்களுக்கு ஆசி வழங்கினார்.முன்னதாக பெருமாளின் பெருமைகள் குறித்து டிவி புகழ், அனந்த பத்மநாப சுவாமிகள் பக்தி பிரசங்கம் நடத்தினார்.நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் முரளி ரகுராமன், பள்ளி முதல்வர் ராமு, தென்கோடிப்பாக்கம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் பங்கஜம் அம்மாள், மல்லிகா, மற்றும் தென்கோடிப்பாக்கம் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.