திருவள்ளூர் அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :2448 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், வெள்ளிக்கிழமை முன்னிட்டு, நேற்று (மார்ச்., 1ல்), கனகவல்லி தாயாருக்கு திருமஞ்சனம், மாலை, தாயார் உள் புறப்பாடு, ஊஞ்சல் சேவை நடந்தது.
ஜெயாநகர் விஸ்தரிப்பில் உள்ள மகா வல்லப கணபதி கோவிலில், துர்க்கை அம்மனுக்கு ராகு கால பூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
திருவள்ளூர் கொண்டமாபுரம் தெரு, கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், நேற்று (மார்ச்., 1ல்) காலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு, மங்கள ஆரத்தி நடந்தது.புதிய திருப்பாச்சூர்
காமேஸ்வரர் சமேத லலிதாம்பிகா கோவிலில், நேற்று (மார்ச்., 1ல்)காலை, லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டு, பெண்கள், தீபங்கள் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.