உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண்டைக்காடு கோவில் மாசி கொடை விழா துவக்கம்

மண்டைக்காடு கோவில் மாசி கொடை விழா துவக்கம்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், மாசி கொடை விழா, 10 நாட்கள் நடக்கும். கேரள பெண்கள் விரதமிருந்து, இருமுடி ஏந்தி வந்து வழிபடுவதால், இது, பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுகிறது. நேற்று காலை, 8:10 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. பூஜிக்கப்பட்ட கொடியை, பூஜாரிகள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின், கொடிமரத்தில் மேல்சாந்தி சட்டநாதன் குருக்கள் கொடி ஏற்றினார். அப்போது, ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு பறந்தது. தொடர்ந்து, கொடிமரத்துக்கு தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !