ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் விழா: தற்காலிக கடைகள் ஏலம்
ADDED :2446 days ago
ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் விழாவையொட்டி தற்காலிக கடைகள் அமைக்கப் படும். இதற்கான ஏலம் இன்று (மார்ச் 5ல்)நடக்கிறது.
இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தன் கூறியதாவது: விழாவை ஒட்டி, 39 கடை அமைக்கப்படவுள்ளது. மார்ச், 23 முதல், ஏப்., 24 வரை, கடை நடத்திக் கொள்ளலாம். இதற்கான ஏலம், கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் இன்று நடக்கிறது. வாய்க்கால் மாரியம்மன் கோவில் வளாகப்பகுதியில் கடைகள் அமைக்க, 10 ஆயிரம் ரூபாய் டிபாசிட் செலுத்த வேண்டும். கோவில் அலுவலகத்தில், இன்று (மார்ச்.,5ல்) காலை விண்ணப்பித்து, மாலையில் நடக்கும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். தற்காலிக கடைகள் மற்றும் கோவிலுக்கான பந்தல் அமைக்கும் பணி, மீனாட்சி சுந்தரனார் சாலையில் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.