உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி மந்தைவெளி திரவுபதி அம்மன் கோவிலில் பால் குடம் ஊர்வலம்

கள்ளக்குறிச்சி மந்தைவெளி திரவுபதி அம்மன் கோவிலில் பால் குடம் ஊர்வலம்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மந்தைவெளி திரவுபதி அம்மன் கோவிலில் சக்தி அழைத்தல், பால்குடம் எடுக்கும் வைபவம் நடந்தது.நேற்று (மார்ச்., 5ல்) காலை 9:30 மணிக்கு கோமுகி நதிக்கரையிலிருந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் சக்தி அழைத்தல் மற்றும் பால் குடம் எடுத்து தேரோடும் வீதி வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை சென்றடைந்தனர்.

அங்கு சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கினர்.தொடர்ந்து கோவிலில் வரும் 8ம் தேதி மகா அஸ்திர யாகம், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப் படுகிறது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் பரம்பரை தர்மகர்த்தா ரகோத்தமன் உள்ளிட்டவர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !