வேப்பூரில் ரதயாத்திரை திரளான பக்தர்கள் தரிசனம்
ADDED :2509 days ago
வேப்பூர்:வேப்பூரில் ராமராஜ்ய ரதயாத்திரையை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ராமராஜ்ய ரதயாத்திரை கடந்த 4ம் தேதி ராமேஸ்வரத்தில் துவங்கி, 12 மாநிலங்கள், 9 ஆயிரம் கி.மீ., தூரம் பயணித்து, ஏப்ரல் 14ம் தேதி அயோத்தியை சென்றடைகிறது. நேற்று 7ம் தேதி காலை, திருச்சியிலிருந்து புதுச்சேரிக்கு ரதயாத்திரை புறப்பட்டது. வழியில், பகல் 12.30 மணியளவில் வேப்பூர் வந்தடைந்தது.சுற்றுப்புற கிராம மக்கள் ரதயாத்திரைக்கு வரவேற்பு அளித்தனர். சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.