பழநியில் பஞ்சாமிர்தம் தயாரிக்ககுவிந்துள்ள மலை வாழைப்பழங்கள்
பழநி: பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு, பழநிமுருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் தயாரிக்க 100 டன்னுக்கு மேல் மலை வாழைப்பழங்கள் பல்வேறு பகுதிகளில்
இருந்தும் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன.பழநி பங்குனி உத்திரவிழாவிற்கு குழுவாகவரும் பக்தர்கள் பஞ்சாதமிர்தம் தயார் செய்து, முருகருக்கு அபிஷேகம் செய்து பிரித்துக் கொள்கின்றனர்.
இவ்வாண்டு பஞ்சாமிர்தம் தயாரிக்க மலைவாழைப் பழங்கள் மைசூர் குடகுமலை, சிறுமலை, பாச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் 100 டன்னுக்குமேல் வந்து குவிந்துள்ளது.
கொடைக்கானல் வாழைப்பழம் வரத்து அதிகமுள்ளதால் விலை உயரவில்லை. கடந்தாண்டு குடகுமலை ஒரு பழம் ரூ.4 முதல் ரூ.6 வரையும், சிறுமலை ஒருபழம் ரூ.4 முதல் ரூ.7வரை விற்றது. தற்போதும் குடகு பழம் கடந்தாண்டு விலைக்கே விற்பனையாகிறது. இதுகுறித்து வியாபாரி யுவராஜ் கூறுகையில், இவ்வாண்டு தமிழகத்தில் வாழைப்பழம் வரத்து இல்லை. இதனால் குடகுமலை, பாச்சலூர், கொடைக்கானல் பகுதியில் இருந்து இறக்குமதியாகிறது. விற்பனையும் சுமாராகவே உள்ளது, வரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்”
என்றார்.