உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கமுதி கோயிலில் பங்குனி திருவிழா 3,000 பேர் பொங்கலிட்டு வழிபாடு

கமுதி கோயிலில் பங்குனி திருவிழா 3,000 பேர் பொங்கலிட்டு வழிபாடு

கமுதி: கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் 3000 பேர்பொங்கல் வைத்து வழிபட்டனர்.

கமுதி சத்ரிய நாடார் உறவின்முறைக்கு தனித்து புராதன பாத்தியமான  முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் மார்ச் 12ல் துவங்கியது.

12 நாட்கள் நடந்த பொங்கல் விழாவில் தினமும், முத்து மாரியம்மன் கேடயத்தில் கோவிலை சுற்றி வலம் வந்து கும்பம் எடுத்தல், பூத வாகனத்தில் அம்மன் நகர் வலம் வருதல், காமதேனு, ரிஷபம், குதிரை, ரிஷப வாகனம் மற்றும், மயில் வாகனத்திலும் நகர் வலம் வந்து, கழுகேற்றம், யானை வாகனம், பொங்கல் வைத்தல், மாவிளக்கு, காணிக்கை செலுத்தி, சிம்ம வாகன ஊர்வல நிகழ்ச்சிகள் நடந்தது.

நேற்று (மார்ச்., 19ல்) முத்துமாரியம்மன் சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சிக்காக மூவாயிரத்து க்கும் மேற்பட்ட பக்தர்கள், கோயில் முன் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். அக்கினி சட்டி, பால்குடம், கரும்பாலை தொட்டில் நேர்த்திகடன், பூக்குழி இறங்குதல், அன்னபறவை வாகனத்தில் நகர் வலம், மஞ்சள் நீராட்டு, அம்மன் ரதத்தில் ஊர்வலம், வெள்ளிக்குதிரை வாகனத்தில்நகர் வலம், சேத்தாண்டி வேடம், கரகம், சிலம்பாட்டம், மயில், புலி, மாடு வேஷமிட்டு பக்தர்கள் ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது.

ஏற்பாடுகளை, கமுதி சத்ரிய நாடார் உறவின் முறை கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !