உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி கோட்டா ஆறுமுக சுவாமி கோவிலில், சூரிய பூஜை

திருத்தணி கோட்டா ஆறுமுக சுவாமி கோவிலில், சூரிய பூஜை

திருத்தணி: கோட்டா ஆறுமுக சுவாமி கோவிலில், நாளை (மார்ச்., 27ல்), சூரிய பூஜை துவக்கி, மூன்று நாட்கள் நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான, கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் 13, 14 மற்றும் 15ம் தேதிகளில், மூன்று நாட்கள் சூரிய பூஜை நடக்கிறது.

அந்த வகையில், நடப்பாண்டிற்கான சூரிய பூஜை நாளை துவங்குகிறது. முதல் நாளில், காலை, 6:15 மணிக்கு, சூரியனின் ஒளிர்கதிர்கள், மூலவர் முருகப் பெருமானின் திருப்பாதம் மீதும், இரண்டாம் நாள், காலை, சூரிய ஒளிக்கதிர்கள் மூலவரின் திருமேனி மீதும், மூன்றாம் நாள், மூலவரின் சிரசின் மீதும், சூரிய ஒளிக்கதிர்கள் விழும். அப்போது, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !