அதிசய அக்னி பகவான்!
ADDED :2589 days ago
நாகை மாவட்டம், திருப்புகலூர் பழம் பெருமை வாய்ந்த தலமாகத் திகழ்கின்றது. இங்குள்ள இறைவன் கோணபிரான் என்றும், அக்னீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி கருந்தாழ் குழலி, இக்கோயிலில் அக்னி பகவான் மிகவும் முக்கியமான வராகக் கருதப்படுகிறார். இவருக்கு தனி மூலவர் சன்னதியும் உற்சவர் விக்ரகமும் அமைந்துள்ளன. இது வேறு எங்கும் காணப்பாடாத சிறப்பாகும். இரண்டு முகம், நான்கு கொம்பு, ஏழு கை, ஏழு ஜுவாலை, மூன்று பாதம் என்ற அமைப்பில் அக்னிபகவான் அழகிய தோற்றத்தில் காட்சி தருவது கண் கொள்ளக் காட்சியாக அமைந்துள்ளது.