பிரமோற்ஸவ விழாவில் திருக்கல்யாணம்!
ADDED :4999 days ago
ராஜபாளையம் :ராஜபாளையம் சொக்கர் கோயில் பிரமோற்ஸவ விழாவின் ஏழாம் நாளான நேற்று காலை திருக்கல்யாணம் நடந்தது. மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சொக்கர் காலை 10.30 மணிக்கு மணமேடையில் எழுந்தருளினார். பின், நடந்த திருக்கல்யாணத்தில் ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா, அவரது மனைவி சுதர்சனம் உள்பட பலர் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், விபூதி பிரசாதமாக வழங்கப்பட்டன. இரவு பூப்பல்லக்கில் சுவாமி, அம்பாள் வீதி உலா வந்தனர்.